
posted 2nd February 2022
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி மறியல் போராட்டம் புதன்கிழமை(02) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 30 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கரையோரமாக வந்த இந்திய இழுவைப் படகுகள் சுப்பர் மடத்தைச் சேர்ந்த மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க வலைகளை சுக்குநூறாக அறுத்து சேதப்படுத்தியதுடன், அவர்களை தொழில் செய்ய இடையூறு ஏற்படுத்தி வருவதைக் கண்டித்து 31 திகதி திங்கட்கிழமை தொடக்கம் பருத்தித்துறை சுப்பர் மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை-பொன்னாலை வீதியை இடை மறித்து வீதியை மூடி பந்தலிட்டு இவ் அராஜகத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
3 ஆவது நாளாக இன்று புதன்கிழமை(02) பெருந்திரளான ஆண்கள் பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பஸ் வண்டியில் இன்று (02) நண்பகல் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுப்பர் மடத்தில் இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தை சுப்பர்மடம் மீனவர் சமூக அமைப்பு முன்னெடுத்து வருகிறது. போராட்ட பந்தலில் மயிலிட்டி மீனவர் கூட்டுறவு சங்கம், முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் ஆதரவுப் பதாதைகளும், வடமராட்சி கிழக்கில் இந்திய இழுவைப் படகினால் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் கண்ணீர் அஞ்சலி பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
இதேவேளை இன்று புதன்கிழமை (02) காலை 7 மணி முதல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு அதற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்தும், படுத்தும் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று புதன்கிழமை (02) இரவு 8 மணி வரை போராட்டம் நீடிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சுலோக அட்டைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும், பெண்கள் அழுது புலம்பியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசம், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசம், பருத்தித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் ஆகிய இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்திய இழுவைப்படகுகளினால் கொல்லப்பட்ட வடமராட்சி கிழக்கை சேர்ந்த இரு மீனவர்களுக்கு நீதி வழங்கு, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை தடைசெய், இதுவரை இழைக்கப்பட்டசேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கு, 2018ஆம் ஆண்டு வெளிநாட்டு கடல் ஒழுங்குபடுத்தல் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றது. போலீசாரும், கடற்படையினரும் போராட்டக்காரர்களுடன் சமரசம் பேசிய போதும் தீர்வு எட்டப்படவில்லை. தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இப்போராட்டம் இன்று புதன்கிழமை இரவு 8 மணி வரை இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாகவும் சுப்பர்மடம் பிரதான வீதியை மறித்து போராட்டக்காரர்கள் தடுத்து உள்ளதால் அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளும் மருதடியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னால் இருந்து சேவைகளை நடத்தி வருகிறது. யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, திருகோணமலை, கட்டைக்காடு சேவைகளை நடத்தி வருகின்றது. கரையோரவீதி மூடப்பட்டுள்ளதால் பருத்தித்துறையில் இருந்து ஓரம்ட்டை நாவலடி வியாபாரிமூலை, மாலை சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக கரையோரவீதிச்சேவை இடம் பெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.
பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் மீனவர் இன்று புதன்கிழமை போராட்டம்

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House