முழு நஷ்ட ஈடு வழங்குக
முழு நஷ்ட ஈடு வழங்குக

இரா. துரைரெத்தினம்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் கொள்கைப் பிரகாரம் இயற்கை உரத்தை (சேதனப் பசளை) பயன்படுத்திய விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமும், நஷ்டமும், பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நஷ்ட ஈட்டை அரசு வழங்க வேண்டும்”

இவ்வாறு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், பத்மநாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் கோரியுள்ளார்.

சேதனப் பசளை பிரயோகத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைரெத்தினம் தமது அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானிய இயற்கை உரத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் முழுப் பாதிப்பிற்கான நஸ்டஈட்டை வழங்குமா?
அரசாங்கத்தின் கொள்கையான இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டுமென முன் வைக்கப்பட்ட திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விருப்பமின்றி நடைமுறைப்படுத்தினார்கள். அத் திட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கவில்லை. ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இதனால் குத்தகைக்கு காணி எடுத்த விவசாயிகளும், அடிப்படை வறுமையான விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

பல விவசாயிகள் தங்களிடமிருந்த நகைகளையும், கால்நடைகளையும், ஏனைய அசையும், அசையா சொத்துக்களையும் விற்றும், வட்டிக்கு பணத்தைப் பெற்றும் வேளாண்மை செய்து நஸ்டம் ஏற்பட்டுள்ளதால் ஒரு வேளை உண்ண உணவிற்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வட்டிக்கு பெற்றுக் கொண்ட பணத்தை மீள செலுத்த முடியாமலும், இருந்த மூலதனத்தைக் கூட இழந்து குறிப்பாக, (நகைகள்,கால்நடைகள்) அடுத்த போகம் எவ்வாறு வேளாண்மை செய்வதென இருந்தவற்றையும் இழந்து நடுத் தெருவில் நிற்கின்றனர். இதேவேளை கடந்த காலத்தில் யூரியா உரத்தை சேமித்து வைத்து வேளாண்மை செய்த ஒருசில விவசாயிகள் மட்டும் பாதிப்படைய வில்லை.

நீர்ப்பாசன வளங்கள் முழுமையாக இருந்தும் கூட இயற்கை உரத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்த விவசாயிகள் நஸ்டப்பட்டதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும்.

பல வழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஸ்டஈடு வழங்குவதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிப்படைந்த விவசாயிகள் அரசு சார்ந்த விவசாயத் துறையினரிடம் தங்களது முறையீட்டை எழுத்து வடிவிலாக வழங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நஸ்டஈட்டை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் வேளாண்மை செய்கை பண்ண முடியும். பகுதிச்சேதம், முழுச்சேதம் என பாதிக்கப்பட்டிருந்தாலும் கருணை கூர்ந்து பாதிப்பிற்கான முழு நஸ்ட ஈட்டையும் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முழு நஷ்ட ஈடு வழங்குக

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House