மீண்டும் தலைதூக்கும் தொழுநோய் அபாயம்!
மீண்டும் தலைதூக்கும் தொழுநோய் அபாயம்!

டாக்டர் குணசிங்கம் சுகுணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கென விஷேட நடவடிக்கையினைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டாக்டர் சுகுணன் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் நிலைமை மிக மோச மாக இருந்தது எனினும் தற்போதும் குறைவடைந்துள்ளது என்று திருப்தி கொள்ள முடியாது.

இதுவரை 23 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 307 பேர் மரணித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் டெல்டா, அல்பா போன்ற பல வேரியன்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்திருந்தது. தற்போது ஒமிக்ரோன் தொற்று காணப்படுகின்றது. இந்நிலையில் நாம் அடுத்த கட்ட நகர்வுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றோம். பொருளாதார, சமூகப் பிறள்வுகளில் இருந்து வெளிவர வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால் சுகாதார வழிமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்து, தடுப்பூசிகளைப் பெற்று, நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் கட்டத் தடுப்பூசிகள் 97 சதவீதமானவர்களுக்கும், இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் 87 சதவீதமானவர்களுக்கும் வழங்கியிருக்கின்றோம். இது இலங்கையின் முதல் ஐந்து மாவட்டங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படு கின்றது.

மூன்றாம்கட்டத் தடுப்பூசி வழங்கலில் நமது இடம் மிகுந்த கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது. அதாவது 25 சதவீதமானோரே பெற்றிருக்கின்றதுடன், இது இலங்கையின் கடைசி 5 மாவட்டங்களில் ஒரு இடத்தை மட்டக்களப்பு பெற வைத்திருக்கின்றது. இதனால் இராணுவத்தினரின் சுகாதாரத் தரப்பும் எம்மோடு இணைந்து கொண்டு தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தக் காலத்தில் மழைவீழ்ச்சி பதிவாகும் காலமாக இருப்பதால், இக்காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்க சந்தர்ப்பமுள்ளது. கடந்த வருடம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த வருடம் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதுவரை ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள் 75 நோயாளிகளே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை எதுவிதமான மரணங்களும் பதிவாகவில்லை. மட்டக்களப்பு மாவட்டம் தற்போது புதுவிதமான ஒரு அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அதாவது, தொழுநோய் தொடர்பான பிரச்சினை தலைதூக்கியுள்ளது. தொழுநோய் சம்பந்தப்பட்ட விடயத்தில் இலங்கையில் காணப்படுகின்ற தொழுநோய் வைத்தியசாலைகளில் ஒன்றாகிய நமது மாந்தீவு வைத்தியசாலை இருக்கின்றது. தற்போதைய நிலையில் தொழுநோயாளர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கும் ஒழுங்குகளே உள்ளது.

அதாவது தனிமைப்படுத்தி, பராமரிப்பின்றி என்ற விடயம் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்திருப்பினும், தற்போது அந்நிலையில்லை என்பதனால் இவ்வைத்தியசாலையை மீண்டும் புனரமைக்கும் திட்டம் அத்தியாவசியமாக இல்லை.

பலருக்குள்ளும் உள்ள சந்தேகம், இவ்வைத்தியசாலை இங்கு அமைந்தபடியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம்என்பதுதான். இதனைக் கண்டறிய நாங்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்து சில ஆராய்ச்சிகளைச் செய்யவுள்ளோம் என்றார்.

மீண்டும் தலைதூக்கும் தொழுநோய் அபாயம்!

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House