
posted 10th February 2022
தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டிருந்து தலைமன்னாரில் தடுத்துவைக்க்பட்டிருந்த கடற்கலங்களை ஏலத்தில் எடுக்கச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக கவலை தெரிவித்தனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டிருந்த 105 இலுவைப்படகுகள், விசைப் படகுகள் மற்றும் கடற்கலங்கள் காலை 10 தொடக்கம் மாலை 4 மணி வரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதாக நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக காரைநகர் 65 கடற்கலங்கள் பெப்ரவரி 7 ஆம் திகதி,
காங்கேசன்துறை 05 கடற்கலங்கள் பெப்ரவரி 8 ஆம் திகதி,
கிராஞ்சி 24 கடற்கலங்கள் பெப்ரவரி 9 ஆம் திகதி
தலைமன்னார் 09 கடற்கலங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி
கற்பிட்டி 02 கடற்கலங்கள் பெப்ரவரி 11 ஆம் திகதிகளில் இவ் ஏலவிற்பனை பகிரங்கமாக விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்ததது.
இவ்வாறான நிலையில் இன்று 10.02.2022 வியாழக்கிழமை தலைமன்னார் பியரில் இந்த 09 கடற்கலங்கள் ஏலத்தில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் இவற்றை ஏலத்தில் எடுப்பதற்கு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றிருந்தபோது ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக கவலை தெரிவித்தனர்.
இவ் ஏலம்விற்பனை செய்யப்படும் இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் ஏலம் எடுப்போரும் சென்றிருந்த வேளையில் அங்கு எலத்தில் விடப்படுவதற்காக இருந்த கடற்கலங்கள் இல்லாத நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அதாவது தலைமன்னார் பகுதியில் கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்து வந்த இவ் இந்திய கடற்கலங்கள் கடலுக்குள் அழிந்து விட்டதாக நீதிமன்றில் கடந்த ஆண்டு (2021) கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாகவும் கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இதனால் அங்கு எவ்வித கடற்கலங்கள் இன்மையால் ஏலத்தில் எடுக்கச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House