மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்கின் அமர்வில் கடற்தொழில் அமைச்சர்

மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடனும் மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை பெறும் நோக்குடனும் மற்றும் கடற்தொழிலாளர்களின் அமைப்புக்களை புனரமைத்து சீர்படுத்தும் வகையிலான கலந்துரையாடும் நோக்குடன் கடற்தொழிலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இக் கூட்டமானது 12.02.2022 அன்று சனிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், கூட்டுறவுச் சங்கங்களின் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தின்போது மன்னார் மாவட்டத்திலுள்ள கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்தொழிளார் நலன்சார் செயற்பாடுகளைவலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அதற்கான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்கின் அமர்வில் கடற்தொழில் அமைச்சர்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House