மன்னார் புதைகுழி சம்பந்தமாக இருந்த தடை உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி மா. இளஞ்செழியன்
மன்னார் புதைகுழி சம்பந்தமாக இருந்த தடை உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி மா. இளஞ்செழியன்
மன்னார் புதைகுழி சம்பந்தமாக இருந்த தடை உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி மா. இளஞ்செழியன்

மன்னார் புதைகுழி வழக்கில் பாதிப்படைந்தவர்கள் சார்பில் சட்டத்தரனிகள் ஆஜராகவும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கவும் உரிமை உண்டு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு.

மன்னார் சதொச அமையும் இடத்தில் 2018 ஆம் ஆண்டு மனித புதை குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் வழக்கு 2018 ஆம் ஆண்டு முதல் மன்னார் நீதவான் நீதிமன்றில் இருந்து வருகின்றது.

இந்த வழக்கில் பாதிப்படைந்தவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது என குறித்த வழக்கில் ஈடுபட்டிருந்த அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்டதை மன்னார் நீதவான் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சட்டத்தரனிகள் ஆஐராகக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து வவுனியா மேல் நீதிமன்றில் மீளாய்வு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரனை செவ்வாய்கிழமை (22.02.2022) நடைபெற்றபோது பாதிப்படைந்துள்ள நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரனி கே.எஸ். ரட்ணவேல் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இதனை ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் மன்னார் நீதவானின் உத்தரவை தள்ளுபடி செய்தார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரனிகள் ஆஜராக உரிமை உண்டு என உத்தரவு வழங்கியுள்ளார்.

அத்துடன் புதைக்குழி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மன்னார் நீதவானின் மேற்பார்வையிலேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழி அகழ்வு பணியின்போது காணாமல் போனோர் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் பத்து நபர்கள் எந்த நேரமும் அங்கு பிரசன்னமாகி இருக்கலாம்.

அத்துடன் புதைகுழி சம்பந்தமான விடயம் வெளிப்படையாக இருக்கும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் பத்து நிமிடங்கள் அந்த இடத்துக்குச் சென்று அந்த நடவடிக்கையை அவதானிக்கவும், செய்தி சேகரிக்கவும் மேல் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக எதாவது விண்ணப்பங்கள் செய்ய வேண்டும் என்றால் மன்னார் நீதவானுக்கே நேரடியாக சமர்பிக்க வேண்டும் என்றும், அகழ்வு பணி தொடர்பாக மன்னார் நீதவானின் கட்டளையே இறுதி முடிவாகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான வீடியோ பின்பு இணைக்கப்படும்.

மன்னார் புதைகுழி சம்பந்தமாக இருந்த தடை உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி மா. இளஞ்செழியன்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House