மன்னாரில் 03.02.2022 அன்று 37 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதனின் 03.02.2022 அறிக்கை தெரிவிக்கிறது.

இவ் அறிக்கையில் 37 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்தாக தெரிவித்துள்ளார்.

அந்நோயாளிகளில் மன்னார் பொது வைத்தியசாலையில் 4 பேர், வங்காலை வைத்தியசாலையில் 13 நபர்கள், முருங்கன் வைத்தியசாலையில் 6 பேர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், அடம்பன், தலைமன்னார், தாராபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் தலா 2 பேர், நானாட்டான், பேசாலை, மாந்தை மேற்கு மடு ஆகிய வைத்திய இடங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 37 நபர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியது 3 ந் திகதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் இதுவரை 3516 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந் நடப்பு வருடத்தில் (2022) இதுவரை 333 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இந்த தொகையில் இம் மாதம் பெப்ரவரி மாதம் 133 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மன்னாரில் கொவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நோக்கக்கூடியதாக இருக்கின்றது

பொதுமக்கள் மத்தியில் கொவிட் தொடர்பாக சுகாதார பகுதியில் விடுக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் தளர்ந்து வருவதே இதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் 03.02.2022 அன்று 37 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House