மகிழ்ச்சியைக் கொடுத்த மேல் நீதமன்றத் தீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக சட்டத்தரனிகள் மன்னார் மன்றில் ஆஐராகக்கூடாது என உத்தரவு இடப்பட்டபோதும் தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள மேல் நீதிமன்ற தீர்ப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் எந்தவொரு நல்லதொரு முடிவும் இதுவரைக்கும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி ஆராயப்பட இருக்கும் இவ்வேளையில் இம்முறையாவது எமக்கு உண்மை தன்மையையும், நீதியையும் இந்த சர்வதேசம் எமக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே எமது அவாவாக இருக்கின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் மன்னார் தலைவி பி. சர்மிளா மடுத்தீன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்ற தீர்ப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு சாதகமான கட்டளை கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் சர்மிளா மடுத்தீன் தொடர்ந்து தெரிவிக்கையில்;

எமது மாவட்த்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினராகிய நாங்கள் இந்த நாளில் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாவது;

மன்னார் நகரில் சதொசா கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவ்விடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் தீவில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளில் பெரும்பாலானோர் பாதுகாப்பு படையினரால் வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களே.

சதொசா கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் எங்கள் உறவினர்களுடையதே என்ற சந்தேகத்தில் நாங்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.

ஆனால், எமக்காக ஆஜராக வந்து வாதாட வந்த சட்டத்தரணிகளை இந் நீதிமன்னறில் முன்னிலையாக முடியாது என தடையுத்தரவு போடப்பட்டது.

எனவே, நாங்கள் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அங்கு எமக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் அவர்களால் நல்லதொரு தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நீதுமனறத்தின் முடிவு எமது துன்ப இருளில் பிரகாசிக்கும் ஒரு சிறு வெளிச்சம்; நல்லதாக முடிவு வருமென்ற சிறு நம்பிக்கை அரும்பத் தொடங்கியுள்ளது. உண்மை வெளிவரும் காலம் எமக்குத் தெரிகின்றது. ஆனால், பாதிக்கப்பட்ட, பறிகொடுத்த உறவுகளாகிய எமக்கும் அவ்வகழ்வைக் காண வழிவருமா என்ற ஒரு சிறு அங்கலாய்ப்பு எம் அடிமனதை வருடிக் கொண்டிருக்கின்றது. அச்சுதந்திரம் எமக்குக் கிடைக்குமா?

13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதிகளிலும் தெருக்களில் கொட்டில்கள் அமைத்து எமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஓஎம்பி அலுவலகம் எமக்காகத் திறக்கப்பட்டிரக்கையில், அங்கு வருகை தந்த ஆணைக்குளுக்கள் காணாமல் ஆக்கப்பட்டோரினதும், எம்முடையமான பதிவுகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், இதுவரைக்கும் எந்தவொரு முடிவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

சர்வதேச நாடுகள் எதிர்வரும் மாதம் கூடவுள்ள வேளையில் எமக்கு நல்ல பதில் வருமா? இந்த ஏக்கம் உயிரோடிருக்கும் எமக்கும், தத்தமது உறவுகளைத் தேடி அலைந்து ஏமாற்றத்துடன் இறந்து போன அந்த ஆன்மாக்களுக்கும் அமைதி தருமா?

மகிழ்ச்சியைக் கொடுத்த மேல் நீதமன்றத் தீர்ப்பு

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House