மகளுக்கு எமனாக வந்த லொறி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மகளுக்கு எமனாக வந்த லொறி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

காலம் சென்ற சிவசுப்பிரமணியம் சிந்துயா

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை படுகாயமடைந்தார்.

கனகராயன்குளம் பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியது.

விபத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா (வயது 33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

லொறி அதிக வேகமாக வந்தநிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மகளுக்கு எமனாக வந்த லொறி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House