பேரினவாத அரசியல் தலைமைகள்

இந் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு தமிழ் மக்கள் காரணமானவர்கள் அல்ல. மாறாக சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து துரோகத்தனங்களைச் செய்தனர். இவ்வாறான சூழலில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா. கலையரசன் குறிப்பிட்டார்.

கல்முனை கல்வி வலயத்திலுள்ள துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பெஸ்ட் ஒப் யங் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இப் பாடசாலை அதிபர் செ. பேரின்பராசா தலைமையில் இன்று (11.02.2022) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா. கலையரசன் அங்கு மேலும் பேசுகையில்;

இந் நாட்டில் யுத்தம் மௌனித்து பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களை வெல்லும் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அத்துடன் தற்போதைய ஜனாதிபதி இனப் பிரச்சினை தொடர்பாக இதுவரை எந்தவிதமான பேச்சுக்களையும் முன்னெடுக்கவில்லை. இது தமிழ் மக்களை காயப்படுத்தும் செயலாகும்.

அரசியல்வாதிகள் ஒரு இனத்திற்கு மட்டும் அல்ல, மாறாக சகல மக்களுக்கும் சொந்தமானவர்கள்.

எமது தமிழ் மாணவர்களின் கல்வி நிலை கடந்த கால யுத்த சூழலால் பெரிதும் பின்னடைவைக் கண்டடுள்ளது. இந் நிலையில் நாம் எமது மாணவர்களின் கல்வியை பலப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எமது அம்பாறை மாவட்டத்தில் ஓரு இலட்சத்து இருபத்ஐயாயிரம் (1,25,000) தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தேவைகளை முடியுமானவரை நிறைவேற்றி வருகின்றேன். எனினும் கொரோணா பெருந் தொற்று எமது மக்களை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் சதி வேலையில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் திரை மறைவில் செயற்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க, இன்று முஸ்லிம் சகோதர்கள் தமிழ்மாணவர்களின் நலன் கருதி உதவி செய்ய முன்வந்துள்ளமை மெச்சத்தக்க விடயமாகும். சிறுபான்மை தமிழ்பேசும் மக்கள் எதிர் காலத்தில் பிரிந்து செயற்பட்டால் பாரிய இழப்புக்களை சந்திக்க வேண்டிவரும் என்றார்.

இந் நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச. சரவணமுத்து, பெஸ்ட் ஒப் யங் நிறுவனத் தலைவர் ஐ.எம். நிஸ்மி, செயலாளர் ஏ. புஹாது, (ஊடகவியலாளர்) இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான் ஆகியோரும் உரையாற்றினர்.

பேரினவாத அரசியல் தலைமைகள்

ஏ. எல். எம். சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House