பிரதான காரணம் இதுதான்

அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் பெரு வெற்றியடைந்தமைக்கு பிரதான காரணம் தமிழ் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுமாகும்.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீட் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது சிங்கள மக்களும் அரசாங்கத்தை சந்தேகத்துடன் பார்த்த போது சுமந்திரன் கோஷ்டியும், ரவூப் ஹக்கீமும் சேர்ந்து 13ம் திருத்தத்தை அமுல்படுத்தும் படி இந்தியாவுக்கு கடிதம் எழுத தயாராகினர்.

அப்போதே நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குப்பைத்தொட்டிக்கு சென்று பெரும்பான்மை மக்களின் தேசிய உணர்வு மேலெழுந்தது.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது ஒருவகையில் தனி நாட்டு கோரிக்கைக்கு ஒப்பானதுதான். அதன் மூலம் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன மாகாணங்களுக்கு செல்வதால் ஜனாதிபதி, பிரதமர் மாகாணங்களுக்கு செல்லும் போது அங்குள்ள பொலிசிடம் அனுமதி கேட்க வேண்டும்.

இத்தகையை பாதகமான 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியாவுக்கு கடிதம் எழுத சுமந்திரனும், மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் கூடி பேசியது முட்டாள்தனமான, காலநிலை தெரியாத அரசியலாகும். இது வயிற்றுப்பசியா அல்லது நாட்டைக்காப்பாதா என்ற கேள்வியை பெரும்பான்மை மக்களிடம் கிளப்பிவிட்டது. இதனை மிகச்சரியான நேரத்தில் பயன்படுத்தி பொதுஜன பெரமுன இந்த மாநாட்டை நடத்தியதன் மூலம் பொருளாதார பிரச்சினையை விட நாட்டைக்காப்பதே முக்கியம் என்றும் அதற்கு தகுதியானவர்கள் ராஜபக்ஷாகள்தான் என்பதை பெரும்பாலான மக்கள் மீண்டும் காட்டியுள்ளனர்.

இதைத்தான் சொல்வது ஹக்கீமும், மனோ கணேசனும் தமிழ் கூட்டமைப்பும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்பது.
இந்த மாநாட்டு வெற்றியின் மூலம் வடக்கு கிழக்குக்கு வெளியே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வாக்கு வங்கியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது என்பது பலராலும் ஜீரணிக்க முடியாத உண்மையாகும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான காரணம் இதுதான்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House