
posted 25th February 2022
பளையில் ஏ-9 வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ-9 வீதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
பளை நகரப்பகுதிக்கு அருகில் ஏ-9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குறித்த நபர் இறந்து பல மணி நேரமாகிவிட்டதாக கடமையில் உள்ள வைத்தியர் தெரிவித்தார்.
இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளந்திரையன் என்பவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கரை ஒதுங்கிய படகு பாதை ஒன்று
வடமராட்சி, பொலிகண்டி கடற் கரையில் படகு பாதை ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி - பொலிகண்டி குழந்தையேசு ஆலய பகுதிக்கு அண்மித்த கடற்கரையில் இந்த படகுப் பாதை கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரை ஒதுங்கிய படகுப் பாதை கனரக வாகனங்கள் போன்ற பாரமான பொருட்களை கடல்வழி போக்குவரத்தில் ஏற்றி இறக்குவதற்காக பயன்படுத்தப்படுவதாகும்.
இப் படகு பாதை எப்படி கரை ஒதுங்கியது என்பது தொடர்பில் பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பு தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
பொலிஸ் மா அதிபருக்கு கொரோனா
இலங்கை பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் செய்துகொண்ட பரிசோதனையின் பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் ஆஜர்படுத்த உத்தரவு
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளுடன் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய மீனவர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கட்டளை இட்டது.
கோவிட் அப்டேற்
இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை 26 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16 142ஆக அதிகரித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------
இதன் காரணமாக அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பரிசோதனை செய்துகொள்வதற்கு முன்னர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று, சில பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் என தெரியவருகிறது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House