
posted 3rd February 2022
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முல்லைத்தீவில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வியாழக்கிழமை (03) முல்லைத்தீவில் தொடக்கி வைத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன், இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி. சேயோன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து போராட்டத்தை அரம்பித்து வைத்தனர்.
இது குறித்து சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில்;
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மிகமோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்துக்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது. அனால் அது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்கி, ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிச் செயற்படும் சட்டமாக அது இருக்கின்றது.
அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.
அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது. அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது. அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடயஙங்களை அறிவித்துள்ளோம்.
இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும். அந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோரும் ஆவணத்தை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்
இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாகச் சென்று வீதி வீதியாகச் சென்று கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கப்படும். தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி கையெழுத்துப் போராட்டத்தை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House