பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்க கையொப்ப நடவடிக்கை -  திருநெல்வேலியில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்க கையொப்ப நடவடிக்கை -  திருநெல்வேலியில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

பயங்கரவாதத் தடை சட்டத்தில் சில திருத்தங்களை செய்த அரசாங்கம் அண்மையில் வர்த்தமானியை வெளியிட்டது. இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே நேற்று திருநெல்வேலி சந்தைப் பகுதியில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்க கையொப்ப நடவடிக்கை -  திருநெல்வேலியில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House