
posted 21st February 2022
இன்று உலகை அச்சுறுத்தும் கொவிட் - 19 பெருந் தொற்று காலத்தில் கூட, பொது நூலகங்கள், மாணவ சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவையினை வழங்கிவருவதைக் காணமுடிகின்றது. எனவே, பொது நூலகங்களை அபிவிருத்தி செய்ய சமூகத்திலுள்ள அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஓய்வு நிலை அதிபரும் நாடக கலைஞருமான ஆ. தட்சணாமூர்த்தி தலைமையில் (19.02. 2022 ) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் க. சரவணமுத்து. சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு சி. குகநேசன் மேலும் பேசுகையில்;
இங்குள்ள பொது நூலகம் எதிர் காலத்தில் நவீன தொடர்பாடல் வசதிகளைக் கொண்ட பொது நூலகமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு வாசகர் வட்ட உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டியது அவசியமாகும். மேலும் மக்களின் வரிப்பணத்தில் நூலகங்கள் இயங்குவதால் நாம் இதனை எமது சொத்தாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
எதிர் காலத்தில் "வீட்டுக்கொரு புத்தகத் திட்டத்தை" அறிமுகம் செய்து பிறந்தநாள் பரிசாகவும், நினைவு தின அன்பளிப்பாகவும் நூல்களைச் சேகரிக்கும் பணியில் வாசகர் வட்டம் முனைப்புடன் தொழில்பட வேண்டும்.
மேலும் இங்குள்ள பிரதேச சபை உறுப்பினருடன் இணைந்து இந் நூலகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். குறைந்தபட்சம் பத்தாயிரம் நூல்கள் இருப்பின் இந் நூலகம் தரமுயர்வு பெறும் என்றார்.
இப் பொது நூலக வாசகர் வட்டத்தின் புதிய தலைவராக அதிபரும். ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பதவிவழி செயலராக நூலகர் எஸ்.எம். ஆர். அமினுதீன் தெரிவு செய்யப்பட்டார்.

ஏ. எல். எம். சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House