நாளை மஹோற்சவ திருமுகம்

கல்முனை மாநகரில் அமைந்துள்ள அருள் மிகுஸ்ரீதரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவதிரு முகம் நாளை ஞாயிறு முதல் (06.02.2022) ஆரம்பமாக விருக்கின்றது.

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான இந்த ஆலயத்தின் இந்த வருடாந்த மகோற்சவ திருமுகம் (திருவிழா) நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக விருக்கின்றது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆலய மஹோற்சவ திருமுகம் எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை இனிதே நிறைவு பெறவிருக்கின்றது.

மஹோற்சவ திருமுகத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் 16 ஆம் திகதி முத்து சப்ற பவனி இடம்பெறுவதுடன் 17 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் தீர்த்த உற்சவத்துடனும் நிறைவு பெறும்.
குறித்த உற்சவகாலத்தில் 12 நாட்களும் காலை பூஜை, நித்திய பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெறும் எனவும்,
மாலை 5 மணிக்கு யாக பூஜை நித்திய பூஜை, தம்மபூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள் வீதி, வெளி வீதி உலாவரல் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தினமும் இரவு 6 மணி தொடக்கம் 6.30 வரையும் கல்முனை – 03 பண்ணிசை மன்றத்தின் கூட்டுப் பிரார்த்தனையும் இரவு 6.30 தொடக்கம் ஏழு மணி வரை கல்முனை ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினரின் தெய்வீக பேருரைகளும் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்த்தோற்சவதினமான எதிர்வரும் 17 ஆம் திகதி கல்முனை இராவணா விளையாட்டுக்கழகம் மாபெரும் அன்னதான நிகழ்வையும் நடத்தவுள்ளது.

நாளை மஹோற்சவ திருமுகம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House