நாடு திரும்பும் விடுவிக்கப்பட்ட 52 இந்திய மீனவர்கள்

நாடு திரும்பும் விடுவிக்கப்பட்ட 52 இந்திய மீனவர்கள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் 52 பேர் 10ஆம் திகதி நாடு திரும்புகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட 56 மீனவர்களில் 55 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஜனவரி 25 ஆம் திகதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நேரம் இவர்களில் 43 பேர் கோவிட் 19ன் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இதன் காரணமாக இயக்கச்சி இடைத் தங்கல் முகாமில் பராமரிக்கப்பட்டு மீண்டும் பரிசோதனையின் பின்பு 43 பேரும் மீரியானைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேநேரம் எஞ்சிய 13 பேரிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேர் கொவிட் 19ன் தாக்கத்திற்கு இலக்காகி உள்ளனர். இதனால் 13 பேரில் 9பேரும் இயக்கச்சியில் இருந்து வெளியேறிய 43 பேருமாக மொத்தம் 52 பேர் 10ஆம் திகதி இரவு நாடு திரும்பவுள்ளனர்.

இதேநேரம் இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மேலும் 32 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரொனாத் தொற்றும் உயிரிழப்பும் அபடேற் (08.02.2022)

இலங்கையில் ஒருநாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மரணங்கள் நிகழ்ந்தன என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்தது.

இதன்படி, 30 வயதுக்கு கீழ் ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக இருவரும், 30 - 59 வயதுப் பிரிவில் 4 ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஐவரும் 60 வயதுக்கு மேற்பட்ட 17 ஆண்களும் 11 பெண்களுமாக 28 பேரும் என மொத்தமாக 35 பேர் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656ஆக உயர்ந்துள்ளது.

நாடு திரும்பும் விடுவிக்கப்பட்ட 52 இந்திய மீனவர்கள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House