
posted 26th February 2022
தேவைக்கு அதிகமான எரிபொருளை விற்க வேண்டாம் - மாவட்ட செயலாளர்
யாழ்.மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப எரிபொருளை பகிர்ந்து விநியோகிக்குமாறு மாவட்ட செயலாளர் க. மகேசன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தேவைக்கு ஏற்ப எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறும் அதிகளவில் கொள்வனவு செய்வதால் தட்டுப்பாடு ஏற்பட்டு கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வழியமைக்கும் என்று மாவட்ட செயலா ளர் க. மகேசன் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது காங்கேசன் துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் முண்டியடித்து சேமித்து வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை. அத்தோடு வழமைபோன்று யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடவேண்டாம். அத் தோடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல்,சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரி பொருளை விநியோகிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாகப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகளை நேற்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று முன்தினம் பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நேற்று காலை ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் ஒருவருடன் அரசியல் கைதிகளின் உறவினர்களும் யாழ். சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக நேற்று காலை சிலைச் சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த வாராந்த சந்தை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கோடும் உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் வாராந்த சந்தை மாங்குளம் - கொக்குளாய் வீதி சந்தியில் அமைந்துள்ள அங்கயற்கண்ணி அன்னக்குடிலில் வாரம் தோறும் திங்கட்கிழமை இடம்பெறும் என கரைதுறைப்பற்று பிரதேச செயலர் ம. உமாமகள் அறிவித்தந்துள்ளார்.
இப் பொருட்களை கொள்வனவு செய்து உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்து மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கரைதுறைப் பற்று பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் அங்கயற்கண்ணி அன்னக்குடில் உணவகத்தில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வாராந்த சந்தை கடந்த திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------
அடையாளப்படுத்தப்பட்ட வனப் பிரதேசங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஹெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம், நட்டாங்கண்டல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் இரண்டாயிரம் ஹெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமான முறையில் முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் வரையிலும் நட்டாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் 194 குடும்பங்களைச் சேர்ந்த 560 வரையானோர் வசித்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த காணிகள் கடந்தகால யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் சிறு சிறுபற்றைக் காடுகளாகவும் காணப்பட்டன.
உண்ணாவிரதத்தைக் கைவிட்ட கைதிகள், உறவுகள்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாகப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகளை நேற்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று முன்தினம் பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நேற்று காலை ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் ஒருவருடன் அரசியல் கைதிகளின் உறவினர்களும் யாழ். சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக நேற்று காலை சிலைச் சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
ரயிலினில் அகப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்
மாவிட்டபுரத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
குறித்த நபர் ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந் துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணி அமைச்சின் நடமாடும் சேவை
வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் நீண்டகால காணிப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சின் நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணிவரை வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் சகல காணியுடன் தொடர்புடைய திணைக்களங்களும் பங்குபற்றவுள்ளதுடன் காணி அமைச்சர், காணி ஆணையாளர் நாயகம், காணி அமைச்சின் செயலாளர், ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
எனவே காணி தொடர்பாக பிணக்குள்ள மற்றும் ஏனைய சகல பொதுமக்களுக்கும் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றி தீர்வை பெற்றுக்கொள்ள முடி யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் அப்டேற் (26.02.2022)
புதிய தொற்றாளர்கள் - 988
இன்று குணமடைந்தோர் - 249
இன்றைய மரணங்கள் - 24
சிகிச்சை பெறுவோர் - 19, 419
மொத்த தொற்றாளர்கள் - 644, 060
மொத்த குணமடைந்தோர் - 608, 475
மொத்த மரணங்கள் - 16, 166
-------------------------------------------------------------------------------------------------------
மீள் குடியமர்வின் பின்னர் மக்களால் துப்பரவு செய்யப்பட்டு பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற காணிகளும் இவ்வாறு வனவளத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட் டுள்ளன.
அதாவது சிராட்டிகுளம், மூப்பன்குளம், பாலம்பிட்டி, நட்டாங்கண்டல் ஆகிய பகுதிகளில் கடந்த புதன்கிழமை முதல் வனவளத் திணைக்களத்தினரால் சிராட்டிகுளம் முன் மொழியப்பட்ட வனப்பிர தேசங்கள் என்ற பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற கிராம அலுவலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கிராமமட்ட அமைப்புக்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House