
posted 22nd February 2022
தமிழ் ஊடகவியலாளர்கள் இக்கட்டான சூழலில் இருந்தபோது தமிழ் ஊடகவியலாளர் சங்கமானது உதயமாகியது. இந்த கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கப்படுவதால் நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒரு சரியான பாதையில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என நடப்பு வருட புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் எஸ். ஸ்ரீகஜன் தெரிவித்தார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (20.02.2022) காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்க கலாவினோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பெற்றுக் கொண்ட எஸ். ஸ்ரீகஜன் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
எமது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கமானது கடந்த இரு வருடங்களாக திட்டமிட்டபடி இயங்க முடியாத நிலை காணப்பட்டது. நாட்டில் எற்பட்ட கொவிட் பரவல் காரணமாகவே இந்த நிலை எற்பட்டது.
இத் தமிழ் ஊடகவியலாளர் சங்கமானது 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சங்கமாகும். இச் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களும் இங்கு வரகை தந்துள்ளனர்.
இந்த அமைப்பை உருவாக்குவதற்கு நாங்கள் பலர் இணைந்து செயல்பட்டோம். உருவாக்கத்தின் ஆரம்ப உருப்பினர்களாகிய பலர் இருக்கின்றபோதும், நிக்ஸன், செல்வராஜா, வாஸ் கூஞ்ஞ ஆகிய மூத்த உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு வருகை தந்ததையிட்டு அனைவரும் பெருமிதமடைகின்றோம்.
இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 25வது வருடத்தை எட்டியுள்ள நிலையில், நாம் எமது ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது, இச்சங்கம் ஆரம்பிப்பதற்கு காரணம் என்ன என்று எல்லாம் நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அது அனைவரும் அறிந்து, அனுபவித்த விடயங்களாகும்.
தற்பொழுது புதிய நிர்வாகம் பொறுப்பேற்று இருக்கும் இந்த வேளையில், எமது பொறுப்பு இக்காலக்கட்டத்தில் அதிக பொறுப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. எமது ஊடகவியலாளர்கள் தற்பொழுது பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதையும் நாம் அறிவோம்.
ஆகவே தமிழ் ஊடகவியலாளர்களை பொறுத்தமட்டில் எமது செயல்பாடு முக்கியம் நிறைந்ததாக இருக்கின்றது. ஆகவே நாம் அனைவரும் இணைந்து ஒரு சரியான பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House