தமிழக முதல்வர் ஸ்டாலின் யாழ்ப்பாணம் வரவேண்டும்

தமிழக முதல்வர் ஸ்டாலின் யாழ்ப்பாணம் வரவேண்டும்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை யாழ்ப்பாணம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மயிலிட்டித் துறைமுகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய மீனவர் பிரச்னைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத்தினருடன் பேசி வருகின்றோம். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அத்துடன் இந்திய அரசின் உதவியுடன் வடக்கு மீனவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ள அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கே முன்னுரிமை வழங்க கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலினை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர். பாலு கச்சதீவு திருவிழா தொடர்பில் உரையாடிய போது இந்தக் கோரிக்கையை அவரிடம் முன்வைத்தேன் என்றார்.

17 ஆம் திகதி பௌதிக மாணவர் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல்துறை மாணவர்களின் பௌதிக மாணவர் ஆய்வு மாநாடு இன்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பேராசிரியர் க. கந்தசாமி சிறப்பு விருந்தினராகவும், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பி. ரவிராஜன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு மாநாட்டில் 18 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.



வடக்கு மக்கள் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்படும் - ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார்

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு மாகாண மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில், துறைசார் குழுக்களுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.

சமைத்த உணவின் விலை, தொழில்முனைவோர், கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவித்தல், பண்ணை விலை மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை, விவசாயிகளுக்கான செலவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அத்தியாவசிய உள்ளீடுகளின் செலவுகள், விவசாய சேவைகள் துறை, வட மாகாண விவசாய அமைச்சகத்தின் திட்டங்கள், படகுகள் பழுது, நிதியுதவி, நங்கூரம், குளிர்பதனம், தொழில், திட்டங்கள் ஆகியவை குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்படும் என்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் யாழ்ப்பாணம் வரவேண்டும்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House