
posted 21st February 2022

டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொவிட் திரிவு ஒமிக்ரோன் பரவல் தொடர்பில், எச்சரிக்கப்பட்டுவரும் நிலையில், டெங்கு நோய்பரவலும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அடிக்கடிபெய்து வரும் பெருமழை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் சாதக நிலமை தோன்றியுள்ள நிலையில் சில பிரதேசங்களில் டெங்கு பரவலும் இனம் காணப்பட்டுள்ளது.
இதனால் கொவிட் பரவல் மட்டுமன்றி டெங்கு பரவல் தொடர்பிலும் மக்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
கொவிட் தடுப்பூசிகளை குறிப்பாக மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெறுவதில் அசட்டைகாட்டாது, அதனை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் கோரியுள்ள அதேவேளை, டெங்கு பரவல் தொடர்பிலும் பொது மக்களை எச்சரித்துள்ளார்.
தத்தமது சுற்றுச் சூழல், வெற்றுக்காணிகள் பழைய கட்டிடங்கள் போன்றவற்றில் டெங்கு பெருகா வண்ணம் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர். ஜீ. சுகுணன்
இதேவேளை டெங்கு பரவல் அதிகரிப்பால் மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்தியத்திலிருந்து டெங்கு பரவலை முற்றாக ஒழிப்பதற்கு உள்ளுராட்சி சபைகள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதாரத்துறைக்கு தேவை எனவும் டாக்டர். சுகுணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House