சுவதம் விருது

சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் உவைஸ் முஹம்மத், கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிராந்தியத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ரீதியாக கலைஞர் சுவதம் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய, ஊடக மற்றும் எழுத்துத் துறைகளில் கால்பதித்திருக்கும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற போதே அவர் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இவ்விருதை வழங்கி வைத்தார். இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நவீன கால கவிதைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுக்கவிதை படைத்து வருகின்ற உவைஸ் முஹம்மத், கடந்த 2018 ஆம் ஆண்டு 'தலைப்பில்லாக் கவிதைகள்' எனும் நூலை வெளியிட்டிருப்பதுடன் பன்னூலாசிரியரான ஊடக வித்தகர் மர்ஹூம் எம்.எம்.எம். நூறுல் ஹக்குடன் இணைந்து 'சமவெளி' எனும் இணையத்தளத்தை நிறுவி, அதன் முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

கவிதைத்துறைக்கு மேலதிகமாக ஓவியம் மற்றும் ஸ்கிரீன் அச்சுத்துறைகளிலும் இவர் கூடிய ஈடுபாடு காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவதம் விருது

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House