
posted 3rd February 2022
சுப்பர்மடத்திலே நடைபெறும் போராட்டமானது சட்டத்துக்கு எதிரான போராட்டம் அல்ல. இது சட்டத்திற்கான போராட்டம். சட்டத்தை அமுல்படுத்தும் படியாக நாங்கள் உரத்து அரசாங்கத்திடத்திலே கேக்கின்ற போராட்டம். சட்டத்தை அமுல்படுத்துகின்றவர்களிடத்திலே நீங்கள் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்யுங்கள் என சொல்கிற போராட்டம். சட்டமறுப்பு போராட்டமல்ல. இது சட்டத்தை அமுல்படுத்துகின்ற போராட்டம். இந்த வித்தியாசம் சட்டத்தை அமுல்படுத்துகின்றவர்களிற்கு தெரிய வேண்டும்.
சுப்பர்மடம் மீனவர்களினால் நேற்று வியாழக்கிழமை (03) நான்காவது நாளாகவும் தொடர் வீதி மறியல் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அச்சமயம் இப்போராட்டத்தை தடை செய்யுமாறு கோரி பொலிசார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறச் சென்ற நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
இந்திய மீனவர்களின் அத்துமீறல் ஆரம்பத்திலே வளங்கள் சூரையாடப்பட்டன. பின்னர் மீன்பிடி உபகரணங்கள் வலைகள் கிழிக்கப்பட்டன. இறுதியில் இன்றைக்கு இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அதனாலேயே இப்போராட்டம் நிகழ்கிறது. இது சட்டத்துக்கு எதிரான போராட்டம் அல்ல. இது சட்டத்திற்கான போராட்டம். சட்டத்தை அமுல்படுத்தும்படியாக நாங்கள் உரத்து அரசாங்கத்திடத்திலேயே கேக்கின்ற போராட்டம். சட்டத்தை அமுல்படுத்துகின்றவர்களிடத்திலே நீங்கள் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யுங்கள் என சொல்கின்ற போராட்டம். சட்ட மறுப்புப் போராட்டம் அல்ல. இது சட்டத்தை அமல்படுத்துகிற போராட்டம். இந்த வித்தியாசம் சட்டத்தை அமல்படுத்துகின்றவர்களிற்கு தெரிய வேண்டும்.
சற்று முன்னர் அவர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றை எடுக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தை தடை செய்வது என்பது சட்டத்தை அமுல்ப்படுத்தாது இருப்பதை அனுமதிக்கிறதாக இருக்கும்.
ஆனால் நீதிமன்றத்துக்கு இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்திலேயே சென்று இந்த விடயத்தை எடுத்துக் கையாள்வோம். இதிலே பாரிய கொடூரம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. உயிர்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன.
தடை செய்யப்பட்ட சட்டவிரோத இழுவைப் படகுகளினாலேயே எங்களது மீனவர்கள் உடைய உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. அதை தடுக்குமாறு தான் நாங்கள் கேட்கின்றோம். சட்டத்தை உபயோகிக்குமாறே நாங்கள் கேட்கின்றோம். ஆகையினாலே அவர்களுக்கு எதிராக உபயோகிக்க வேண்டிய சட்டத்தை உபயோகிக்காமல் எங்களுக்கு எதிராக நாங்கள் வீதியை மறித்து இருக்கின்றோம் என்பதற்காக நீதிமன்ற உத்தரவைபு பெறுவது நியாயமான ஒரு விடயமல்ல.
இந்தப் போராட்டம் நீடிக்க வேண்டும். இது தொடர்ச்சியாக இருக்கவேண்டும். ஒரு இடத்திலே இல்லாட்டில் இன்னொரு இடத்திலே நடத்தப்படும். வேண்டுமென்றால் பொலிசார் எமக்கு பின்னாலேயே ஓடி வந்து நீதிமன்ற உத்தரவைப் பெறட்டும். ஆனால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை வந்தோம். 22, 23 நீதிமன்றங்களில் தடை உத்தரவு இருந்தது. அத் தடை உத்தரவு எங்களை ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் நான்கு நாட்கள் நடந்து பொலிகண்டி வரைக்கும் வந்தோம். இன்றைக்கும் அந்த நீதிமன்றங்களிலே எங்களை குற்றவாளிகளாக நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கு நாங்கள் முகம் கொடுக்கின்றோம். ஆகையினாலே அந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் நீதிமன்றை அவமதிக்க தயாரில்லை. நாங்கள் நீதிமன்றை அவமதிப்பவர்களுமல்ல. நாங்கள் சட்டத்தை பேணுகிறவர்கள். சட்டத்திற்கு அடங்கி வாழுபவர்கள். சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்ற ஒரு கூக்குரலைத்தான் நாங்கள் இயலாத கடைசியாக செய்யாமல் இருக்கின்ற காரணத்தினாலேயே இப்படியான கவனயீர்ப்பு மூலமாக செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். என்பதை சட்டத்தை அமுல்படுத்துகிறவர்களிற்கு நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House