சுதந்திர தினம் ஒரு கரிநாள் - மனுவேல் உதயச்சந்திரா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இம் மாதம் 4 ந் திகதி (04.02.2022) இலங்கை தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது. எமது உறவுகள் தத்தமது உறவுகளைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எவ்வாறு சதந்திர தினம் கொண்டாட முடியும்? அவர்களுக்கு அந்நாள் கரிநாளாக அமையுமல்லவா என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் மன்னார் அமைப்பின் தலைவி மனுவேல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகத்திற்குக கருத்துத் தெரிவித்த உதயச்சந்திரா;

எமது உறவுகளைத் தேடிக் களைத்துப் போய் இருக்கும் நாங்கள், இச் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இத் தினத்தை அனுசரிக்க இருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு நீங்களும் உறவுகளே என்பதை மனதில் கொண்டு எங்களுடன் இணையுங்கள் என அழைப்பு விடுக்கின்றோம்.

இச் சந்திப்பின்போது இவ் அமைப்பைச் சார்ந்த திருமதிகள் ராஐத்துரை சுமலஷ்சுமி, குமாரசாமி பவானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினம் ஒரு கரிநாள் - மனுவேல் உதயச்சந்திரா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House