சுகாதார தொழில் சங்கங்கள் வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சம்பள பிரச்னை உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளாவிய ரீதியில் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழில் சங்கங்களைச் சேர்ந்தோர் 7 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் பணிபுறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் சுகாதார சேவையைச் சேர்ந்த 16 தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,

சம்பளப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு வேண்டும்

சுகாதார நிர்வாக சேவையை நிறுவுக

உரிய காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்கு

சம்பள முரண்பாட்டை நீக்கு

மருந்துகளின் விலைகளை உடனடியாக குறை

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பியதுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், தமது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காது விடின் தமது போராட்டம் தொடரும் எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுகாதார தொழில் சங்கங்கள் வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House