கோவிட் அப்டேற் 10.02.2022 - ஏலத்தில் படகுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்திய மீனவர்களின் 4 படகுகள் ஏலத்தில்

புத்தளம்கற்பிட்டி கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் 4 படகுகள் இன்று வெள்ளிக்கிழமை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

முற்பகல் கற்பிட்டி – ஆனவாசல் கடற்படை முகாமில் இந்த ஏல விற்பனை இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் வாரியபொலை ஆகிய பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

தலா 50,000 ரூபாய் வீதம் நான்கு படகுகள் 2 இலட்சம் ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 படகுகள் நேற்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று ஏல விற்பனை நடைபெறவில்லை.

தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படகுகள் ஏலத்தில் விடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்றைய தினத்துடன் 152 படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த படகுகள் 59 இலட்சத்து 46,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் அப்டேற் 10.02.2022

கொரோனா தொற்றினால் மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய வெள்ளிக்கிழமை தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,723 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 623,248 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் அப்டேற் 10.02.2022 - ஏலத்தில் படகுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House