கொரொனாத் தொற்றும், மரணமும் அப்டேற் (01.02.2022)

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரொனா

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் சுயமாக முன்வந்து தங்களைப் பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, கர்ப்பிணித் தாய்மார்கள் இருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியர் நிமால் அருமைநாதன் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது கொரோனா தொற்றுப் பரவும் வேகம் அதிகரித்துக் காணப்படுகின்றமையால், பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவேண்டும். 1ஆம், 2ஆம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்தாதவர்கள் அவற்றை உடனடியாக செலுத்தவேண்டும் என்றார்.

இலங்கையில் கொரொனாத் தொற்று 15ஆயிரத்திற்கும் கூடிவிட்டது

இலங்கையில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை (01.02.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15, 473ஆக உயர்வடைந்தது.

நாளாந்தம் அதிகரிக்கும் கொரொனா

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் கொரொனா தொற்று நாளாந்தம்
அதிகரித்து வருகிறது. இன்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் 25 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையின் அறிக்கையிலேயே இந்த விவரம் வெளிவந்தன.

இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பெறப்பட்ட மாதிரிகளில் 22 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து கிடைக்கப்பெற்ற மாதிரிகளிலிருந்து 3 பேரும், மன்னார் மாவட்ட பொது மருத்துமனை அனுப்பி வைத்த மாதிரிகளில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் 144 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரொனாத் தொற்றும், மரணமும் அப்டேற் (01.02.2022)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House