கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (01.02.2022)

நாடுபூரான கொரொனாவின் தாக்கம்

கொரோனா தொற்று காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை 19 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றுத் தெரிவித்தது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17 பேரும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும், இடைப்பட்டவர்களில் 2 பேரும் அடங்குவர். தவிர, இறந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் உள்ளனர்.

இந்த மரணங்களுடன் நாட்டில் தொற்றால் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரொனா

யாழ்ப்பாணத்தில் 20 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் இன்று 105 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். போதனா மருத்துவமனையில் 17, சங்கானை பிரதேச மருத்துவமனையில் 2 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு விமானப் படை முகாமில் 9 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்

வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் இருவருக்கும், பூவரசங்குளம் பிரதேச மருத்துவமனையில் இருவருக்குமாக நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (01.02.2022)

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House