கொரொணா, மலேரியா, டெங்கு அப்டேற்

கொரொணாத் தொற்று

கோவிட்-19 தொற்றால் புதன்கிழமை நேற்றும் 25 உயிரிழப்புகள் நிகழ்ந்தன என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 - 59 வயது பிரிவில் 6 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 ஆண்கள் மற்றும் 5 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இதேநேரம் வடக்கு மாகாணத்தில் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது.

பரிசோதனை முடிவின்படி குப்பிழான் தெற்கை சேர்ந்த 65 வயதான அம்பலவாணர் சுசீலா என்பவரே உயிரிழந்தார் என்று அறிய வருகின்றது.

தவிர, யாழ். போதனா மருத்துவமனையில் 10 பேருக்கும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இருவருக்கும், நொதேர்ன் சென்றல் தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மலேரியா தொற்று அப்டேற்

இலங்கையில் வட மாகாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது என்று சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (16) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர், ஆலோசகர் சமூக மருத்துவர் பிரசாத் ரணவீர மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

அத்துடன், நான்கு வாரங்களுக்குள் நாட்டில் நான்கு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றுள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்திற்குள் மொத்தம் ஆறு மலேரியா நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களில் நான்கு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.


985 பேருக்கு டெங்குத் தொற்று

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 985 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 147 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 102 தொற்றாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேரும், வவுனியாவில் 10 பேரும், மன்னாரில் 9 பேரும், முல்லைத்தீவில் 6 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெங்கு பரவலில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 245 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர். புத்தளத்தில் 242 பேரும், மட்டக்களப்பில் 125 பேரும், திருகோணமலையில் 108 பேரும் டெங்கால் பாதிக்கப்பட்டனர்.

எனினும், கம்பகா, களுத்துறை, அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் எவரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரொணா, மலேரியா, டெங்கு அப்டேற்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House