
posted 10th February 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்க்கான இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர்நிர்மாண பணிகளை சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் சிறாப்பரின் நான்காவது வாரிசான பொன்னா விக்னராஜாவின் நினைவுதினமான நேற்று விஷேட பூஜை வழிபாடுகள் சிறாப்பர் மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட சிறாப்பர் மடத்தின் தெற்கு பகுதி வாசல் மற்றும் அதனுடன் இணைந்த பகுதியை சிறாப்பர் நிதியத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களம் இணைந்து மீள்புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகம முறைப்படி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளான பா.கபிலன், உஷாந்தி, தொல்லியல் திணைக்கள ஊழியர்கள், நகுலேஸ்வரர் ஆலய குருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House