கல்வியே நிலையான சொத்து

“கல்வி ஒன்றே உலகில் நிலையான சொத்தாகும். எனவே கல்விச் செல்வத்தைப் பெருக்குவதற்கு உதவுவோரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதாகும்” இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் கூறினார்.

நிந்தவூர் அல்-பர்ஹான் சனசமூக நிலையத்தினரின் அனுசரணையுடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கென இடம்பெறவிருக்கும் இலவச வகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் சன சமூக நிலையத்தலைவர் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“சன சமூக நிலையங்கள் போன்ற மக்களோடு இணைந்த அமைப்புக்கள் பெயரளவோடு நின்று விடாது பல்வேறு சமூக, கல்வி ஊக்குவிப்புப் பணிகளையும் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

உலகில் நமக்கு கல்வி ஒன்றே நிலையான சொத்தாகும். இந்த வகையில் கல்வி முன்னேற்றத்திற்கான சேவைகளைப் பொது அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும்.

போட்டிகள் கூடியுள்ள இக்காலகட்டத்தில் மாணவர் திறமை ஆற்றல்களை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் உட்பட மேலும் பலரும் உரையாற்றியதுடன், மாணவர் விருத்தி வேலைத்திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்வியே நிலையான சொத்து

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House