
posted 17th February 2022
மட்டக்களப்பு. காரைதீவைச் சேர்ந்தவரும். தற்சமயம் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வசித்து வருபவருமான நாகமணி குணரெட்ணம் ஏழை மாணவர் கல்விக்கு கைகோர்த்து கைகொடுப்போம் எனும் உயரிய நோக்கில் "சிட்னி உதயசூரியன்மாணவர் உதவி மையம்" என்ற பெயரில் சமூகநல அமைப்பொன்றை தோற்றுவித்து போர்ச் சூழல் மற்றும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றார்.
இதன் ஒரு அங்கமாக கல்முனை கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்டப் பிரதேசப் பாடசாலையாகவுள்ள கமு/கமு/ துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் ( 16.02. 2022) பாடசாலைப் பை மற்றும் கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
"சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின்" இலங்கைக்கான இணைப்பாளர் எம். புண்ணியநாதன் இப் பாடசாலை அதிபர். செல்லையா பேரின்பராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான அன்பளிப்புக்களை நேரில் வந்து வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ. விஜயரெட்ணமும் கலந்து சிறப்பித்தார்.
இத்தகைய கல்வி ஊக்குவிப்பு உதவிகளை இவ் அமைப்பு கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளை தெரிவு செய்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House