கணக்காளராக  கடமையேற்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம். றியாஸ், இன்று (22) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த சில வருடங்களாக கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கடமையாற்றி வந்த ஏ.எச். தஸ்தீக், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, மஹாஓய வலயக் கல்வி பணிமனையில் கணக்காளராக கடமையாற்றி வந்த கே.எம். றியாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மருதமுனையைச் சேர்ந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, 2016ஆம் ஆண்டு தொடக்கம் மஹாஓய வலயக் கல்வி பணிமனையின் கணக்காளராக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணக்காளராக  கடமையேற்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House