
posted 3rd February 2022
ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாகி இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால் இரண்டு பிள்ளைகளின் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை புரிந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை (02.02.2022) இடம்பெற்றுள்ளது.
இம் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் விசாரனையை முன்னெடுத்தபோது இறந்தவரின் மணைவி சாட்சியம் அளிக்கையில்;
இறந்த தனது கணவர் நீண்ட நாட்களாக ஐஸ் என்ற போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார்.
இதனால் எங்கள் குடும்பத்தில் நாளாந்தம் அமைதியின்மையே காணப்பட்டு வந்ததாகவும், சம்பவம் அன்றும் இரவு 11 மணியளவில் இவர் தனதுடன் உணவு தொடர்பாக பிரச்சனைப் பண்ணிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின் புதன்கிழமை (02) காலையில் தனது பிள்ளை அப்பாவை தேடிய போது தான் எங்கள் வீட்டுக்கு அருகமையிலுள்ள அக்காவின் வீட்டின் வளாகத்துக்குள் உள்ள ஒரு பகுதியில் தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
இறந்தவர் அஜுறூதீன் முகம்மது அதீல் (வயது 25) இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரனை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House