ஏப்ரல் 30 ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வரும் கட்டாய தடுப்பூசி ஆணை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் கட்டாய தடுப்பூசி ஆணை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட சில காரணங்களால் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் நபர்களைத் தவிர முழுமையாகத் தடுப்பூசி போடாத எவரும் பொது இடங்களில் நுழையவோ, சேவை பெறவோ அதிமதிக்கப்படமாட்டார்கள்.

பொது இடங்களில் நுழைய அவர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் வர்த்தமானி கூறுகிறது.

“முழுமையாக தடுப்பூசி” என்பது பொருத்தமான தடுப்பூசியின் தேவையான அளவுகளை சம்பந்தப்பட்ட நபர் பெற்றுள்ளார் என்பதைக் குறிப்பதாகும். இது சுகாதார அமைச்சால் தீர்மானிக்கப்படும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் பல பகுதிகளிலும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. எனவே, இதுவரை அதனை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வரும் கட்டாய தடுப்பூசி ஆணை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House