எமது மீனவர்களின் வாழ்வும், உயிரும் அச்சுறுத்தலில் -  அங்கஜன்
எமது மீனவர்களின் வாழ்வும், உயிரும் அச்சுறுத்தலில் -  அங்கஜன்

அங்கஜன் இராமநாதன் பா. உ.

எமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் மாத்திரமே இதுவரை அழிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது உயிர்ப் பிரச்சனையாக மாறி விட்டது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 02.02.2022 புதன்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

எமது பிரதேச கடற்தொழிலாளர்கள் மிகப்பெரிய வேதனையில் இருந்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய வருமானம் அழிக்கப்படுகிறது. அதனையும் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ளது. எனியும் நடவடிக்கை எடுக்கிறோம், எடுக்கிறோம் என்று கூறி காலத்தை கடத்த முடியாது. வாழ்வாதாரப் பிரச்சனையையும் தாண்டி உயிர் பிரச்சனையாக மாறி விட்டது. இங்குள்ளவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அந்த அடிப்படையில் நான் நம்புகிறேன் கடற்தொழில் அமைச்சர் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கூறி மக்களுடைய நம்பிக்கையையும், எனது நம்பிக்கையையும் நிறைவேற்றி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று. அதேசமயம் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் என்ற ரீதியில் நானும் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துச்செல்லவுள்ளேன். அண்மையில் யாழ் வந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அவர்களிடமும் இது தொடர்பாக முழுமையாக எடுத்துரைத்திருந்தேன். ஒரு புரிந்துணர்வு ஊடாகவே இந்த அச்சுறுத்தல் நிலைமையை மாற்ற வேண்டும் என்றும் அந்த நிரந்தர தீர்வுக்கான முயற்சியை விரைவில் எடுப்பேன் என்றும் என்னிடம் உறுதியளித்திருந்தார். இந்த வாழ்வாதார மற்றும் உயிர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றார்.

எமது மீனவர்களின் வாழ்வும், உயிரும் அச்சுறுத்தலில் -  அங்கஜன்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House