இலங்கையின் சுதந்திர தினவிழா

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவிருக்கின்றது.

இம்முறை கொவிட் - 19 பிறழ்வு பரவல் காரணமாக சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி சுதந்திர தினவிழாக்களை நடத்துவதற்கு நாடு தயாராகி வருகின்றது.

இதன்படி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின பிரதான நிகழ்வு இடம்பெறவிருப்பதுடன், நாடளாவிய ரீதியில் மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களிலும் சுதந்திரதின விழாக்கள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபயராஜ பக்ஷ தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவிருக்கும் 74 ஆவது சுதந்திர தின விழாவில் 6500 முப்படையினர் மற்றும் பொலிஸ் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உட்பட கலந்து கொள்ளவிருப்பதுடன்,

முப்படையினரின் அணி வகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும், சுபீட்சமான தாய் நாடும்” எனும் தொனிப் பொருளில் இம்முறை பிரதான சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளன.

இதேவேளை பிராந்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் சுதந்திரதின விழா நிகழ்வுகள் சிறப்புற இடம்பெறவுள்ளன.

மாகாண, மாவட்ட, பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகள், அரச மற்றும் முக்கிய திணைக்கள அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.
அன்றைய தினம் தேசியக் கொடி ஏற்றலுடன், மரநடுகை, இரத்ததானம், உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இதற்கென இடம்பெறவுள்ளன.

இதேவேளை கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் தேசியக் கொடி விற்பனையில் வியாபாரிகள் பலரும் ஈடுபட்டுள்ளதுடன், பல அரச அலுவலகங்களில் தற்போதிருந்தே தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

இலங்கையின் சுதந்திர தினவிழா

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House