இம்மாதம்  28  வருகிறது பிரேரணை

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக தடைசெய்து நீக்குமாறு அரசைக் கோரும் தீர்மானம் ஒன்றுக்கான பிரேரணை கல்முனை மாநகர சபையின் இம்மாத அமர்வில் முன்மொழியப்படவுள்ளது.

கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பில், முன்னாள் மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவரும், ரெலோ அமைப்பின் உப தலைவருமான ஹென்ரி மகேந்திரன் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழிவதற்கான முன்னறிவிப்பைச் செய்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட் கிழமை நடைபெறவுள்ளது.

இந்த அமர்விலேயே, இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக்கோரும் தீர்மானம் மாநகர சபையில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும்,

அதற்கான பிரேரணை முன்மொழிவை தாம் சபையில் முன்வைப்பதற்கான முன்னறிவித்தலை செய்துள்ளதாகவும் உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாகத்தடை செய்யுமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி முன்னெடுத்துவரும் கையெழுத்தும் போராட்டம் வடக்கு கிழக்கு மற்றும் தலை நகர் கொழும்பிலும் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இளைஞர்கள், யுவதிகள், அப்பாவிகள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருவதுடன், மூவின மக்களதும் ஆதரவுடன் கூடிய இதற்கான கையெழுத்துப் போராட்டமும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.

இம்மாதம்  28  வருகிறது பிரேரணை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House