இந்திய 12 மீனவர்கள் மீண்டும் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க வந்ததாக தெரிவிக்கப்படும் இரண்டு இலுவைப்படகுகளில் வந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் சனிக்கிழமை (12.02.2022) தலைமன்னார் கடற்பரப்புக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் அன்று தமிழ்நாடு இராமேஸ்வரத்திலிருந்து இரு இலுவைப்படகுகளில் வந்த இந்திய மீனவர்கள், இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட படகுகளையும் சந்தேக நபர்களான மீனவர்களையும் கடற்படையினர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணதீவு கராச்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களை அப்பகுதியிலுள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய 12 மீனவர்கள் மீண்டும் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House