இந்திய நிபுணரின் பங்கேற்புடன் ஆயுர்வேத மருத்துவ கருத்தரங்கு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் கடமையாற்றும் ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விசேட மருத்துவக் கருத்தரங்கு ஒன்று இன்று (23) சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆயுர்வேத மருத்துவ திணைக்கள ஆணையாளர் டாக்டர் ஆர். ஸ்ரீதர் முன்னிலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த ஆயுர்வேத விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்டாலின் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீலின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம். வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்திய நிபுணரின் பங்கேற்புடன் ஆயுர்வேத மருத்துவ கருத்தரங்கு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House