
posted 8th February 2022
அல்வாய் வடக்கு மகாத்மா முன்பள்ளியின் புதிய ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்க்கும் கால்கோள் விழா இன்று காலை 11: மணிக்கு அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன் தலமையில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக புதிய மாணவர்கள் விதியிலிருந்து விருந்தினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டு கொடுத்து வரவழைக்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.
இதில் மங்கள விளக்குகளை வடமராட்சி கல்வி வலைய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு சத்தியசீலன், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிகல்கம், feeford சர்வதேச பாடசாலை இயக்குநர் திரு. பகீரதன், அல்வாய் வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆங்கில ஆசிரியர் ஆகியோர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து வரவேற்புரையை சனசமூக தலைவர் திரு யோகநாதநன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து புதிய 12 மாணவர்களுக்கும் நினைவு கேடயங்கள் விருந்தினர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
கருத்துரைகளை அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம், வடமராட்சி வலய முன்பள்ளி கல்வி பிரிவு பணிப்பாளர் சத்தியசீலன், மகாத்மா முன்பள்ளி நிர்வாக குழு தலைவர், அல்வாய் வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகயோர் நிகழ்த்தியதை தொடர்ந்து முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதில் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம், வடமராட்சி வலய கல்வி பணிமனை முன்பள்ளி கல்வி பணிப்பாளர் சத்தியசீலன், பீபோட் சர்வதேச பாடசாலை இயக்குநர் பகீரதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அயல் கிராம முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House