அத்துமீறி நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் திங்கட்கிழமை (08) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மீனவர்களுக்கு மலேரியா, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டனர்.

அவர்களை நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் நேற்று மதியம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பின்னைய செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மாநிலம் ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 22 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் நேற்று(7) உத்தரவிட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு நெடுந்தீவு மற்றும் கச்சதீவுக்கு இடைப்பட்ட கடலின் நெடுந்தீவுக்கு மேற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது , 3 இழுவைப்படகுடன் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House