
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஹெலியில் நெடுந்தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினாலும், அதன் தாக்கத்திலிருந்து எவ்வாறு நாட்டின் நிலைமையினை உலக நாடுகளுடன் கிட்டத்தட்ட அவற்றின் நிலைமைக்காவது கொண்டுவருவதற்காக சுற்றுலாத் துறையைக் கையில் எடுத்துள்ள நிலைமையில் இப்போது முதல் முறையாக நெடுந்தீவிற்குக் வானூர்தியினை சேவையில் அமர்த்தியுள்ளது.
ஹெலி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.
நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவின் சுற்றுலாத் துறையில் முதன்மையாக ஒரு சிறந்த முன்னேற்ற படிக்கல்லாக இவ்வருகை அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)