
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வெளிநாட்டு தூதுவர்கள் - நல்லை ஆதீன குரு முதல்வர் சந்திப்பு
யாழ்ப்பாணம் வந்துள்ள மூன்று நாடுகளின் தூதுவர்கள் நல்லை அதீன குரு முதல்வரை நேற்று முன்தினம் (16) சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து, ஜப்பான், தென்னாபிரிக்கா நாடுகளின் தூதுவர்கள் மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்தனர்.
இவர்கள், நேற்று முன்தினம் நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்தனர்.
சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட், ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி, தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், நல்லை ஆதீன குரு முதல்வர் சிறீல சிறீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஆன்மீக சமயத் தலைவர் ரிசி தொண்டுநாத சுவாமிகளையும் சந்தித்தனர்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமய ரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமய தலைவர்களால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சினைகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படைக்கு தேவையான விடயங்கள், கலாசார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)