வாள் தயாரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் - யாழ். அரச அதிபர்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வாள் தயாரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் - யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு வாள் தயாரிப்பவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன் கேட்டுள்ளார்.

யாழ். சமூக செயற்பாடு மையத்தின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது சூழலுக்கேற்ப எமது வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எமது வாழ்க்கை முறைக்கேற்ப அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் அதனை பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையை எத்தனை பேர் பார்க்கிறார்கள். இந்திய தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள். சிறுவர்களிலும் பார்க்க சிறுமிகளை அவதானித்தால், அவர்களின் பேச்சுகளில் நிறையவே மாற்றங்களை காணலாம். அந்தளவுக்கு சினிமா பார்க்கிறார்கள்.

நாங்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எமது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே எதிர்கால சந்ததிகள் முறையான, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள்.

இன்றைய காலத்தில் வாள்வெட்டு கலாசாரம், போதைவஸ்து பயன்பாடு அதிகரித்து ஆக்கிரமித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைய வேண்டும். 'வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் தயாரிப்பவர்களை கைது செய்யுங்கள்' என அண்மையில் இடம்பெற்ற பொலிஸாருடனான சந்திப்பில் அறிவுறுத்தினேன் என்றார்.

வாள் தயாரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் - யாழ். அரச அதிபர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)