
posted 8th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற ஒருங்கிணைந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை
தீவிரமாக பரவக்கூடிய டெங்குநோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (07) வியாழக்கிழமை வல்வெட்டித்துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகரசபையினர், இராணுவத்தினர், போலீஸார், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பருத்தித்துறை பிரிவு தலைவர், செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வீடுவீடாக சென்றும் மற்றும் வீதியோரமாகக் காணப்பட்டும் டெங்கு பரவக்கூடிய இடங்களையும் சீர் செய்ததுடன் ஆதிகோவிலடியிலிருந்த வல்வெட்டித்துறை நகர்வரையும் உள்ள பாடசாலைகளில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)