
posted 5th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வட மாகாண பேரவை செயலக செயலாளராக சிறீ நியமனம்
வடக்கு மாகாண பேரவை செயலகத்தின் செயலாளராக ஆழ்வார்பிள்ளை சிறீ நியமனம் பெற்றுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலாளராக பணியாற்றிய அவர் பதவி உயர்வு பெற்று புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (06) புதன்கிழமை பதவியை பொறுப்பேற்பார்.
ஆழ்வார்பிள்ளை சிறீ நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலகங்களின் செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)