
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். மாவட்டம் முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், வைத்திய அறிக்கை கிடைக்கப் பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும், போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)