
posted 27th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம்
யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் நேற்று (26) செவ்வாய் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆழிப்பேரலையால் மரணித்தவர்களுக்காக சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)