
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி
யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஞாயிறு (24) நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஜேசு பாலன் பிறப்பினைத் தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது.
நத்தார் விசேட திருப்பலியில் யாழ்ப்பாண மறை மாவட்ட அருட்தந்தையர்கள், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)